ராஜகிரிய வீதி - கொதடுவ, மொரவிடிய வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 28 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.