மாத்தறை மிரிஸ்ஸ கடற்கரையோரத்தில் நீரில் மூழ்க சென்ற மூன்று வெளிநாட்டவர்களை கடற்கரை பாதுகாப்பு படையினர்  காப்பற்றியுள்ளனர்.

ரஷ்யா மற்றும் செக் குடியரசு நாட்டை சேர்ந்த இரு பெண்கள் உட்பட மூன்று பேர் கடலில் சிக்குண்டு உயிருக்கு போராடிய சந்தர்ப்பத்தில் கடற்கரை பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த பாதுகாப்பு படையினர் குறித்த மூவரையும் காப்பாற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.