இலங்கைக்கருகில் பயணித்த வர்த்தகக் கப்பலிலிருந்த வெளிநாட்டருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து துரிதகதியில் செயற்பட்ட இலங்கை கடற்படையினர் அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கிரீஸ் நாட்டுக்குச் சொந்தமான அலொநிஷன் என்ற கப்பல், கட்டார் நாட்டிலிருந்து தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொள்கையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அறிந்த இலங்கை கடற்படையினனர், கடற்படைக்குச் சொந்தமான அதிவேக விசைப்படகின் உதவியுடன் சுகயீனமடைந்த வெளிநாட்டவரை மீட்டு அம்பியுலன்ஸின் உதவியுடன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக  அனுப்பிவைத்தமை குறிப்பிடத்தக்கது.