அவிசாவளை, புவக்பிட்டிய புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து கணவனும் மனைவியும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது

நேற்று அதிகாலை 2.30 மணியளவில் அவிசாவளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையிலேயே பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

மனைவியை கூரிய ஆயுதமொன்றினால் கழுத்தை வெட்டிக் கொலை செய்துவிட்டு கணவன் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இருவரும் பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று'ம் மனைவி அவிசாவளை பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்த நிலையிலேயே தற்காலிகமாக குறித்த வீட்டில் வாடகைக்கு அறையொன்றினைப் பெற்று தங்கியிருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

இந்நிலையில், கடந்த 7 ஆம் திகதி மனைவி தங்கியிருந்த அறைக்கு பஸ் சாரதியான கணவன் வந்ததாகவும் இருவருக்கிடையில் இடம்பெற்ற தகராறு காரணமாகவே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இரண்டு பிள்ளைகளின் தாயான 29 வயது பெண்ணே கொலை செய்யப்பட்டவராவர். தற்கொலை செய்துகொண்ட இவரது கணவர் 33 வயதானவராவர்.