அவிசாவளை பகுதியில் கூரிய ஆயுதத்தில் தாக்கி இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 33 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் இடம்பெற்ற இசைக்கச்சேரி ஒன்றின் போதே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.