இலங்கையிலுள்ள விசேட தேவையுடையோருக்கு உதவும் நோக்கில்  அமெரிக்காவில் வசிக்கம் சிறுமியொருவர் மக்களிடம் உதவி கோரியுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பேஸ்புக் பக்கத்தில் தரவொன்று பதிவேற்றப்பட்டுள்ளது.

நடாஷா பண்டுவாவெல என்ற 16 வயதுடைய சிறுமி இலங்கையைச் சேர்ந்தவரென்றும் அவர் அமெரிக்காவில் வசித்து வருபவரென்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி இலங்கையிலுள்ள விசேட தேவையுடையோருக்கு உதவும் முகமாக   ஊன்றுகோல்கள் மற்றும் சக்கர நாற்காலிகளை பெற்றுக் கொடுப்பதற்கு நன்கொடை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு கீழ்காணும் இணைய முகவரிக்கு சென்று உதவிகளை வழங்க முடியும்.

Movement to Remember

http://www.movementtoremember.org/