ஊடகவியலாளர் கீத் நொயரை தாக்கிய சம்பவம் : இராணுவ அதிகாரிகள் பிணையில் விடுதலை

Published By: Ponmalar

30 Mar, 2017 | 03:52 PM
image

ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில்  கைதுசெய்யப்பட்ட  இராணுவ அதிகாரிகள் அறுவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கல்கிசை நீதவான் இன்று (30) பிறப்பித்துள்ளார்.

சந்தேக நபர்கள் தலா 10 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜுலை முதலாம் திகதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில்  கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐந்து இராணுவ அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டதுடன், அதற்கு பிறகு மற்றுமொரு இராணுவ அதிகாரி கைதுசெய்யப்பட்டு, மொத்தமாக ஆறுவர்  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

ஊடகவியலாளர் கீத் நொயார்  கடந்த 2008 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து தாக்குதலுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59