முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது ஆட்சிக்காலத்தின் போது மேற்கொண்ட கொடுக்கல்வாங்கல்கள் செலவுகள் போன்றவற்றை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி 100 பக்கங்களைக் கொண்ட கடிதமொன்றை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மஹிந்த ராஜபக் ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

ஒரு மாத காலத்திற்குள் பதிலளிக்குமாறு வலியுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்கு வந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு பதவியிலிருந்து வெறியேறிய வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் செலவுகளை வழங்குமாறு அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் திருமண மற்றும் மரண சடங்கு நிகழ்வுகளுக்கு சென்று செலவிட்ட விபரங்கள் மற்றும் கொள்வனவு செய்த மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் வகைகள் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்களின் விபரம் தற்போதுள்ள சொத்து விபரம் போன்றவற்றின் விபரங்களையும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.