இலங்­கையில் முதல் முறை­யாக வெளிநாட்டு அணிகள் பங்­கே­ற்கும் சைக்கிள் ஓட்டப் போட்டி நடை­பெ­ற­வுள்­ளது.

'டீ கப்' என்ற பெயரில் எல்.எஸ்.ஆர். நிறு­வனம் நடத்தும் மாபெரும் சைக்கிள் ஓட்டப் போட்டி எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 7ஆம், 8ஆம், 9ஆம் திக­தி ­களில் நடை­பெ­ற­வுள்­ளது.

சர்­வ­தேச சட்ட திட்­டங்­க­ளுக்கு அமைய நடை­பெறும் இந்த சைக்கிள் ஓட்டப் போட்­டியில் முதல்­மு­றை­யாக 10 நாடு­களைச் சேர்ந்த 7 வெளி­நாட்டு அணிகள் பங்­கு­பற்­ற­வுள்­ளன.

7ஆம் திகதி மட்­டக்­க­ளப்பு பாசிக்­கு­டாவில் ஆரம்­ப­மாகும் குறித்த போட்­டி­யா­னது 133 கிலோ­மீற்­றர்கள் பய­ண­மாகி மஹியங்­க­னையில் நிறை­வு­பெறும். 

போட்­டியின் இரண்டாம் நாளான  8ஆம் திகதி மஹி­யங்­க­னையில் ஆரம்­பித்து கண்­டியில் நிறை­வு­பெ­று­கின்­றது. இதன் பந்­தயத் தூரம் 71 கிலோ­மீற்­ற­ராக நிர்­ண­யிக்­கப்­பட்டுள்ளது.

போட்­டியின் கடைசி நாளான 9ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கண்­டியில் ஆரம்­பித்து நீர் கொழும்பு வரை பய­ண­மா­கின்­றது. இதன் பந்­தயத் தூரம் 120 கிலோ­மீற்­ற­ராகும்.

நெதர்­லாந்து, கென்யா, ஜேர்மன், பிலிப்பைன்ஸ், இந்­தியா, மலே­சியா, சிங்­கப்பூர் போன்ற நாடு­க­ளி­லி­ருந்து பல அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. அதேபோல் இலங்கையின் பத்து அணிகளும் இதில் கலந்துகொள்கின்றன.

இப்போட்டிகளுக் கான அனுசரணையை ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.