உலகின் மிகப்பெரிய காப்பீடு சந்தையான 'லாயிட்ஸ் ஒப் லண்டன்' என்ற நிறுவனம் தனது புதிய அலுவலகத்தை பிரஸ்ஸல்ஸ் நகரில் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறுவதால் தமது வர்த்தகத்தை இழக்க முடியாது என தெரிவித்தே தமது புதிய அலுவலகத்தை பிரஸ்ஸல்ஸ் நகரில் அமைக்க முடிவு செய்துள்ளதாக லாயிட்ஸ் ஒப் லண்டன் இன்று தெரிவித்துள்ளது.

லண்டனில் இயங்கி வந்த 329 வருட பழமையான லாயிட்ஸ் ஒப் லண்டன் நிறுவனத்தின் இந்த அடிதிரடி முடிவானது பிரித்தானியாவின் வர்த்தக வரலாற்றில் பாரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து முறைப்படி பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான, பிரதமர் தெரசா மே கையெழுத்திட்ட அறிக்கை நேற்று பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க்கிடம் பிரிட்டன் தூதர் சர் டிம் பரோ வழங்கினார். இந்நிலையில் கடிதத்தை வழங்கி ஒரு நாளிலேயே இந்த தீர்மானத்தை லாயிட்ஸ் ஒப் லண்டன் எடுத்துள்ளது.