(எம்.சி.நஜிமுதீன்)

அரசாங்கத்திற்கு எதிராக உத்தியோகபூர் எதிர்கட்சித் தலைவர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. எனவே எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தற்போது ஊமையாகியுள்ளார்.  அவரால் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் சீடராகக்கூட செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாறாக அவர் அரசாங்கத்தின் சமிஞ்சை விளக்காக  செயற்படுவதாக தினேஷ் குணவர்தன எம்.பி. குற்றம் சாட்டினார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.