(எம்.எம்.மின்ஹாஜ்)

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது முக்கிய பதவிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரவித்தார்.

இது தொடர்பில் வினவிய போதே அமைச்சர் கேசரி இணையத்தளத்திற்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியில் பாரிய மறுசீரமைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளன. இதன்போது முக்கிய பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. 

இவ்வருடம் பல்வேறு தேர்தலுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இந்த தேர்தலுக்கு தற்போது தயாராக வேண்டியுள்ளது. இதன்போது கட்சியின் செயற்திறனை அதிகரிக்க வேண்டியுள்ளது.

தற்போது அமைச்சு பதவிகளில் ஈடுப்பட்டு வருபவர்களினால் கட்சி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் உள்ளது. ஆகையால் இதற்காக கட்சியில் புதிய பதவிகளை நாம் நியமனம் செய்யவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.