சொந்த மகளுடன் 22 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்து குடும்பம் நடத்தி வந்த தந்தை கைது செய்யப்பட்டார். 

அர்ஜென்டீனாவில் லொரெட் நகரில் 56 வயதான குறித்த நபர் தனது மனைவி பிரிந்து சென்றதும் தனது சொந்த மகளுடன் உறவுகௌ;ள ஆரம்பித்துள்ளார். 

9 வயது முதல் தன்னுடன் தந்தை உறவுக்கொண்டதாகவும் இந்த உறவுமூலம் கடந்த 22 வருடங்களில் அவர் 8 குழந்தைகளுக்கு தனது தந்தை மூலமாகவே தாயாகியுள்ளார். 

இது தொடர்பில் குறித்த யுவதி தெரிவிக்கையில், 

தனது தாய் எனது தந்தையை விட்டு பிரிந்து சென்றதும் தன்னை அவரின் மனைவியாக்கி கொண்டதாகவும்,அவர் தன்னை பாலியல் அடிமை போலவே நடத்தியதாகவும், வெளியில் யாரிடமாவது கூறினால் தன்னை கொலை செய்வது விடுவதாகவும் மிரட்டி வந்தார். 

தம்மை 22 ஆண்டுகளாக கொடுமைப்படுத்திய தந்தைக்கு எதிராக தனக்கு நீதி கிட்டும் என   நம்பிக்கையுடன் வழக்கு தொடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட மகள் தெரிவித்துள்ளார். 

மேலும், குறித்த வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று தந்தையின் உறவினர்கள் தம்மை அச்சுறுத்தல் செய்வதாகவும்,தமது வாழ்க்கையை நாசப்படுத்திய அவரை சிறைக்கு அனுப்புவதே தமது விருப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்றுள்ளது.