முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க நீதிமன்றத்தில் வெளிநாடு செல்ல அனுமதி கோரியுள்ளார்.

அவுஸ்திரேலியா செல்வதற்காக எதிர்வரும் மாதம் 18 ஆம் திகதிமுதல் 28 ஆம் திகதிவரை வெளிநாடு செல்ல அனுமதி தருமாறு மனுவொன்றினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மனு தொடர்பில் எதிர்வரும் மாதம் 3 ஆம் திகதி அவதானம் செலுத்துவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.