தரையிறங்கியபோது ஏற்பட்ட கோளாறு காரணமாக, 141 பயணிகளுடன் பயணித்த போயிங் ரக விமானம் பற்றி எரிந்த சம்பவம் பெருவில் இடம்பெற்றுள்ளது.  

பெருவின் ஜாவுஜா நகரிலுள்ள பிரான்சிகோ அண்டீன் விமான நிலையத்திற்கு, அந்நாட்டு தலை நகரான லிமாவிலிருந்து வந்த போயிங் ரக விமானம், 141 பயணிகளை சுமந்து வந்த நிலையில் ஓடுபாதையில் தறையிரங்கிய போது, கட்டுப்பாட்டை இழந்ததால் தீப்பிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 

மேலும் விமானத்தை ஓடுபாதையில் நிறுத்த முடியாமல், விமானி தடுமாறியதாகவும், விமானத்தில் இருந்த பயணிகள் பயந்து கூச்சலிட்டுள்ளனர். இந்நிலையில் விமான தானியங்கி தொழில்நுட்பம் மூலம் விமானம் கட்டுப்படுத்தப்பட்டு ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்ற நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு விமான நிலைய தீயணைப்பு பிரிவினரின் அதிரடியான நடவடிக்கையின் மூலம், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், விமானத்தில் ஏற்பட்ட தீ குறித்து விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.