பஸ்களுக்கு எதிராக ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விட்டுச் சென்ற பஸ் : துரத்திச் சென்றும் நிற்கவில்லை : வவுனியாவில் சம்பவம்

Published By: Ponmalar

29 Mar, 2017 | 11:59 AM
image

வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் அரச ஊழியர்கள், செட்டிகுளம் செல்லும் இ.போ.ச சாலை பஸ்கள் சரியான நேரத்துக்கு செயற்படுவதில்லை என தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது செட்டிகுளத்திற்கு செல்லும் பஸ் ஒன்று திடீரென, ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்களை விட்டுவிட்டுச் சென்றுள்ளது. அரச ஊழியர்கள் துரத்திச் சென்றும் பஸ் நிற்காமல் சென்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இது தொடர்பாக மனு ஒன்றை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் இன்று கையளித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், 

வவுனியாவிலிருந்து செட்டிகுளம் செல்லும் பஸ்கள் குறித்த நேரத்திற்குள் செல்வதில்லை. வவுனியாவில் 7 மணிக்குச் செல்லும் பஸ் 9 மணிக்கு செட்டிகுளம் செல்கின்றது. 

இதனால் அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் தமது கடமைகளை எவ்வாறு சரியாக மேற்கொள்ளமுடியும்? பாடசாலை செல்லும் மாணவர்கள் சில பாடங்கள் முடிந்த பின்னரே பாடசாலை செல்லவேண்டி எற்பட்டுள்ளது. அதே போல அரச ஊழியர்களும் குறித்த நேரத்திற்குள் அலுவலகத்திற்குச் செல்லமுடியவில்லை இது தொடர்பாக பல தடவைகள் இ.போ.ச. சாலைக்குத் தெரியப்படுத்தியிருந்தோம். எமது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் இது தொடர்பாக தெரியப்படுத்தியிருந்தோம்.  நேரக்கணிப்பாளர் அலுவலகத்திலிருக்கும் தொலைபேசியில் அழைப்பு ஏற்படுத்த முடியாது. வரும் அழைப்பை மட்டுமே பெறமுடியும் பஸ் வந்தால் செல்லும் என்றும் நேரக்கணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

எமக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே இன்று போராட்டம் மேற்கொள்ளவேண்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் சரியான தீர்வொன்று கிடைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை செட்டிகுளம் பகுதியில் பஸ் நிலையத்தில் பாடசாலை அதிபர் தலைமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இதில் மாணவர்கள், கிராமசேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29