(எம்.சி.நஜிமுதீன்)

400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை இவ்வருடத்தில் ஈட்ட வேண்டியுள்ளதால் அம்பந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். 

எனினும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நான்காயிரத்து 300 மில்லியன் ரூபா நிதி விரயமாக்கப்பட்டுள்ளது. அந்நிதி விரயமாக்கப்பட்டிருக்காவிடத்து அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்பதை மத்திய வங்கியின் ஆளுநருக்கு கூறிக்கொள்ள விரும்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரவித்தார். 

கூட்டு எதிர்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரைாயற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.