சீனாவின் பிரபல ஹொங்கோவ் கால்பந்தாட்ட மைதானத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, மைதானம் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஷங்காய் நகரிலுள்ள ஹொங்கோவ் கால்பந்தாட்ட மைதானத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமா,க குறித்த மைதானம் மிகவும் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களை தகவல் பகிர்ந்துள்ளன. 

காலை நேரத்தில் ஏற்பட்டுள்ள குறித்த விபத்தினால், எவ்வித உயிர்சேதங்களும் ஏற்படவில்லை எனவும், இருப்பினும் மைதான சேதாரங்கள் குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி தொடங்கவிருந்த, சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளுக்காக திட்டமிடப்பட்டிருந்த குறித்த மைதானமானது  தற்போது தீயினால் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.