முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை பெற்றுக்கொண்டதற்கான 142 மில்லியன் ரூபாவை செலுத்தாமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கு  தொடர்பில் பிரதிவாதிகளின் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக வழக்கு எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.