பங்களாதேஷின் 46 ஆவது சுதந்திர மற்றும் குடியரசு தினம் இலங்கையிலுள்ள பங்களாதேஷ் தூதரகத்தினால் கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்வு பங்களாதேஷுக்கான இலங்கைத் தூதுவர்  எம். ரியாஸ் ஹமிதுல்லா  தலைமையில் கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்றது.

சுதந்திர மற்றும் குடியரசு தின நிகழ்வுக்கு பிரதம அத்தியாக கிறிஸ்தவ விவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க கலந்துகொண்டார்.

இதேவேளை, ஏனைய நாடுகளின் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள், அமைச்சர்கள்  மற்றும் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.