அவுஸ்திரேலியாவில் “டெபி“ புயல் தாக்குமென, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இதுவரை 3500 க்கும் மேற்பட்டோர், அபாயமிக்க பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மணிக்கு 300  கிலோ மீற்றர் வேகத்தில் இப்புயல் வீசவுள்ளது. இப்புயல் காற்றினால் அவுஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் பெரும் தாக்கம் ஏற்படலாமெனஇ அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக குயின்ஸ்லாந்து பகுதியில் பெரும் தாக்கங்கள் ஏற்படலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காற்றை தொடர்ந்து வெள்ள அபாயம் ஏற்படலாமெனவும், மக்கள் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாண கடற்கரையை அண்மித்துள்ள பகுதிகளில் இருந்து  சுமார் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

செவ்வாயன்று வடகிழக்குப் பகுதியில் கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் ‘டெபி’ புயல் 4 ஆம் எண் புயற்காற்று என வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2011 யாசி சூறாவளிக்குப் பிறகு அவுஸ்திரேலியாவை தாக்கும் பயங்கரமான புயல் இது என்று கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.