கொழும்பு இரண்டில் வசிக்கும் 28 வயது நிரம்பிய இளைஞன் இன்று அதிகாலை 4.45 மணிக்கு அரேபியா விமானத்தின் மூலம் டுபாய் நாட்டுக்கு செல்ல வந்தவர். மேலும்,இவர் வெளிநாட்டு நாணயங்களை களவாக தமது பயணப்பையில் மறைத்து வைத்து கொண்டு செல்ல முயன்ற வேளை சுங்கபிரிவினரால் கைதுச்செய்யப்பட்டுள்ளார்.

இவர் தமது பயணப்பையில் அமெரிக்கா டொலர் மற்றும் இலங்கை நாணயங்களும் அடங்களாக மொத்தமாக 20 லட்சத்து 48 ஆயிரத்து 110 ருபாவை கொண்டுச்செல்ல முயன்றுள்ளார்.

குறித்த இளைஞனிடம் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கதகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.