ஜனாதிபதி மைத்திரியை சந்திக்க சந்தர்ப்பம் கேட்டுள்ள மஹிந்த

Published By: Raam

28 Mar, 2017 | 09:44 AM
image

நல்­லாட்சி அர­சாங்கம் தற்போது முன்­னெ­டுத்­து­ வரும் நிகழ்ச்­சி­நிரலை தொடர்ந்தும் முன்­னெ­டுத்துச்சென்றால் நாட்டை மயா­னத்­திற்கு கொண்டுசெல்லும் நிலை உரு­வா­கலாம். எனவே நாட்டின் தற்­போ­தைய நிலைமை தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் அவ­காசம் கோரி­யுள்­ள­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

உண்­ணா­வி­ர­தத்தில் ஈடு­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்­சவை  நேற்று  சந்­தித்த பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச நீண்ட நாட்­க­ளாக பிணை வழங்­கப்­ப­டாமல் சிறைச்­சா­லையில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ளார். அவர் நியா­ய­மான கார­ணங்­களை முன்­வைத்து பிணை கோரி­ய­போதும் அது மறுக்­கப்­பட்­டுள்­ளது. அத­னால்தான் அவர் உண்­ணா­வி­ர­தத்தில் ஈடு­பட்­டுள்ளார்.

விமல் வீர­வன்­சவின் கைதைத் தொடர்ந்து அவர் பக்கம் ஏரா­ள­மான மக்கள் திரண்­டுள்­ளனர். அதற்­கான சந்­தர்ப்­பத்தை அர­சாங்­கமே ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்­துள்­ளது. அத்­துடன் அர­சாங்­கத்­திற்கு எதி­ராகச் செயற்­ப­டு­ப­வர்­களைத் பழி­வாங்கும் வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. இருந்­த­போ­த­திலும் அவ்­வா­றான செயற்­பா­டுகள் மூலம் எம்மை அடக்­கி­விட முடி­யாது. ஏனெனில் மக்கள் பலம் எமக்­குள்­ளது.

மேலும் விமல் வீர­வன்ச மீது சுமத்­தப்­பட்­டி­ருக்கும் குற்­றச்­சாட்­டை­யொத்த குற்­றச்­சாட்­டுள்­ள­வர்கள் அர­சாங்­கத்தின் பக்­கமும் உள்­ளனர். எனினும் அவர்கள் சுதந்­தி­ர­மாக  செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றனர். இத­னூ­டாக அர­சாங்கம் சட்­டத்தை பாகு­பா­டாக நடை­மு­றைப்­ப­டுத்த முனை­வதை அவ­தா­னிக்க முடி­கி­ற­றது.

மேலும் அர­சாங்­கத்­தி­லுள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அமைச்­சர்­களும் “விமல் வீர­வன்­சவின் உடல் நிலை பாதிக்­கப்­பட்டால் அவரை மயா­னத்­திற்கு கொண்டு செல்ல வேண்டும்” எனக்கு குறிப்­பி­டு­கின்­றனர். இருந்­த­போ­திலும் அர­சாங்கம் இவ்­வா­றாக தனது நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து முன்­னெ­டுத்துச் சென்றால் விமல் வீர­வன்­சவை மாத்­தி­ர­மல்ல, முழு நாட்­டையும் மயா­னத்­திற்கு கொண்டு செல்ல வேண்­டிய நிலை உரு­வாகும். ஆகவே இவ்­வா­றான செயற்­பா­டு­களை தொடர்ந்தும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

 அரசாங்கம் அண்மைக்காலமாக முன்னெடுத்துச்செல்லும் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவகாசம் கோரியுள்ளோம். அதற்கான அவகாசம் கிடைக்கும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31