வடக்கு,கிழக்கு காணி விடு­விப்பு தொடர்­பான விட­யங்கள் ஜனா­தி­ப­தியின் கைக­ளி­லேயே உள்­ளன. எவ்­வா­றா­யினும் வடக்கு, கிழக்கு பகு­தி­களில் படை­யினர் வச­முள்ள காணிகள் படிப்­ப­டி­யாக விடு­விக்­கப்­படும் என காணி, சுற்­றுலா அபி­வி­ருத்தி மற்றும் கிறிஸ்­தவ மத விவ­கார அமைச்சர் ஜோன் அம­ர­துங்க தெரி­வித்தார்.

பாது­காப்பு படை­யி­னரின் கையி­ருப்பில் உள்ள காணி­களை விடு­விப்­பது தொடர்பில் ஜனா­தி­பதி செய­ல­ணியே பிர­தான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் என்றும் அமைச்சர்  குறிப்­பிட்டார்.

கொழும்பில் நேற்று நடை­பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்­து­கொண்ட  அமைச்­ச­ரிடம் கேப்­பா­பு­லவு மக்­களின் காணி விடு­விப்பு போராட்டம் தொடர்பில் வின­விய போதே அமைச்சர் கேச­ரிக்கு மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் இந்த விடயம் குறித்து  மேலும்  குறிப்­பி­டு­கையில்,

நாட­ளா­விய ரீதியில் காணி பிரச்­சி­னைகள் உள்­ளன. காணி சம்­பந்­தப்­பட்ட அனைத்து பிரச்­சி­னை­களும் எனது பொறுப்பின் கீழேயே உள்­ளன. 

எனினும் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் யுத்­தத்­தினால் இடம்­பெ­யர்ந்து வாழும் மக்­களின் காணி விடு­விப்பு தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் விசேட செய­லணி அமைக்­கப்­பட்­டுள்­ளது. 

எனவே வடக்கு கிழக்கு பகு­தி­களில் படை­யினர் வச­முள்ள காணி­களை விடு­விப்பு தொடர்­பாக என்னால் எதுவும் கூற முடி­யாது. ஜனா­தி­ப­தியின் கைக­ளி­லேயே  அந்த விடயம் உள்­ளது. 

எவ்­வா­றா­யினும் வடக்கு கிழக்கில் இரா­ணுவ வச­முள்ள காணிகள் படிப்­ப­டி­யாக விடு­விக்­கப்­படும். தற்­போதும் பல ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. 

எனவே வடக்கு கிழக்கில்   தற்­போது போராட்­டங்­களில் ஈடு­பட்டு வரும் பொது மக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிமடுக்கும். இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தி படிப்படியாக விடுவிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.