கட­லுக்­க­டியில் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தை நடத்­த­வேண்­டி­யேற்­படும்

Published By: Raam

28 Mar, 2017 | 09:25 AM
image

தேர்­தல்கள் தொடர்ந்தும் புறக்­க­ணிக்­கப்­ப­டு­மாயின் நாட­ளா­விய ரீதியில் அனைத்து அரச நிறு­வ­னங்­களும் முடங் கும் வகை­யி­லான இரண்­டா­வது பாரிய ஹர்த்­தா­லினை இவ்­வ­ரு­டத்­துக்குள் அர­சாங்கம் எதிர்­கொள்ள நேரிடும் என தூய்­மை­யான   ஹெல உறு­மய கட்சி எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. 

அத்­த­கை­ய­தொரு சந்­தர்ப்­பத்தில் நல்­லாட்சி அர­சாங்கம் தமது அமைச்­ச­ரவை கூட்­டத்தை கட­லுக்­க­டி­யி­லேயே நடத்த வேண்­டி­யேற்­படும் எனவும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் அவ் அமைப்பின் தலை­வ­ரு­மான உதய கம்­மன்­பில தெரி­வித்தார்.   

தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நல்­லாட்சி அர­சாங்கம்  மக்­களின் ஜன­நா­யக கட­மையை நிறை­வேற்­ற­வி­டாமல் நடை­பெற வேண்­டிய தேர்­தல்­களை ஒத்­தி­வைத்து வரு­கின்­றது. 

 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான பதவிக் காலங்கள் ஏற்­க­னவே நிறைவு பெற்­றி­ருக்கும் நிலையில் குறித்த தேர்­த­லினை நடத்­து­வ­தற்­கான எவ்­வித ஆயத்­தங்­க­ளையும் அர­சாங்கம் மேற்­கொள்­ளாமல் அதில் கால­தா­மதத்த­தையே ஏற்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றது.  

அத்­துடன் தொடர்ந்தும் தேர்­தல்கள் நடத்­தப்­ப­டு­வதில் ஏற்­பட்டு வரும் காலதாம­தத்­தினால் மக்­க­ளது ஜன­நா­யக உரி­மைக்கு பங்கம் ஏற்­ப­டு­வதுடன் நாட்­டி­னது அபி­வி­ருத்தி செயற்­பா­டு­க­ளிலும் பாரிய மந்­த­க­தி­யி­னையும்  உரு­வாக்­கி­யுள்­ளது. 

இதே­வேளை  தேர்­தல்­களை நல்­லாட்சி அர­சாங்கம் தொடர்ந்தும் புறக்­க­ணித்து நாட்டின் ஜன­நா­ய­கத்­துக்கு தீங்கு ஏற்­படும் வகையில் செயற்­பட்­டு­வ­ரு­வ­தற்கு எதி­ராக நாடு தழு­விய ரீதி­யி­லான மாபெரும் ஹர்த்தால் ஒன்­றிற்கு அர­சாங்கம் முகங்­கொ­டுக்க வேண்­டி­யேற்­படும். 

 நாட­ளா­விய ரீதியில் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள   ஹர்த்­தா­லா­னது எமது நாட்டில் முன்

­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள இரண்­டா­வது பாரிய ஹர்த்­தா­லாகும்.   

கடந்த 1953 ஆம் ஆண்டில் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக பண்­டாரநாயக்­க­வினால் மேற்­கொள்­ளப்­பட்ட நாட­ளா­விய ரீதி­யி­லான பாரிய ஹர்த்­தா­லினால் அர­சாங்கம் பாரிய பொரு­ளா­தார விளை­வு­களை சந்­திக்க வேண்­டி­யேற்­பட்­டது. இதனால் அப்­போது ஆட்­சி­யி­லி­ருந்த சேர் கொத்­த­லா­வல தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய கட்சி கப்­ப­லில் தமது அமைச்­ச­ரவைக் கூட்­டத்தை நடத்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. இது பிற்­கா­லத்தில் ஐக்­கிய தேசிய கட்­சியின் வீழ்ச்­சிக்கு வித்­திட்­டது.

அதே போன்­ற­தொரு நிலையை தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்கம் இவ்­வ­ருடம் எதிர்­கொள்­ள­வேண்­டிய நிலை ஏற்­படும். தேர்­தல்­களை புறக்­க­ணித்து வரு­வதால் அர­சாங்­கத்­துக்கு இந்­நிலை ஏற்படவுள்ளது.

நாடு தழுவிய ரீதியில் மேற்கொள் ளப்படவுள்ள இவ்விரண்டாவது ஹர்த்தா லினால் சகல அரச நிறுவனங்களும் முடங்கும். அனைத்து நிறுவனங்களினதும் பாரிய நிர்வாக முடக்கத்தினால் நல்லாட்சி அரசாங்கம் பாரிய நெருக்கடியை சந்திக்கும். இதனால் அரசாங்கத்தினது அமைச்சரவைக் கூட்டத்தினை கடலுக்கடியிலேயே மேற் கொள்ள வேண்டியேற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36