நண்­ப­ருடன் மது அருந்­திய நபர், எரி­கா­யங்­க­ளுடன் சட­ல­மாக மீட்­கப்­பட்ட சம்­பவம், ஊவா  பர­ண­கமைப் பகு­தியின் மஸ்­பென்ன என்ற இடத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்­பெற்­றுள்­ளது.

மஸ்­பென்ன கிரா­மத்தைச் சேர்ந்த ஐந்து பிள்­ளை­களின் தந்­தை­யான 67 வயது நிரம்­பிய நபரொருவரே இவ்வாறு, எரி­கா­யங்­க­ளுடன் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்ளார். சட­ல­மாக மீட்­கப்­பட்­ட­வரின் நண்­பரை சந்தேகத்தின் பேரில் ஊவா  பர­ண­கமைப் பொலிஸார் கைது­செய்து, விசா­ர­ணைக்­கு உட்ப­டுத்­தி­யுள்ளனர்.

தொடர்ந்தும், ஊவா  பரணகமைப் பொலிஸார் தீவிர புலன் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளனர். விசா­ர­ணைகள் நிறை­வுற்ற பின்னர் கைது செய்­யப்­பட்ட நபர், வெலி­மடை மஜிஸ்திரேட் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­ப­டு­வா­ரென்று, பொலிஸார் தெரி­வித்­தனர்.