கல்கிஸ்சை – கல்தமுல்ல பிரதேசத்தில் வீட்டின் குளியலறையில் இருந்து எரிகாயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

சடலத்திற்கு அருகில் இருந்து மண்ணெண்ணெய் போத்தல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டுள்ள சடலம் பதுளை - மடுல்சீமை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான பெண்ணொருவர் என கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பெண் அந்த வீட்டில் பணி பெண்ணாக வேலை செய்து வந்துள்ளவர் எனவும் தெரியவந்துள்ளது.