இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முக்கியமான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை அணி தொடரை சமனிலையில் தக்கவைப்பதற்கு போட்டியில் இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டியதுடன், பங்களாதேஷ் அணி இந்த போட்டியில் வெற்றிபெறுமாயின் தொடரை கைப்பற்றும்.

இலங்கை அணியை பொறுத்தவரையில் சுராங்க லகக்மால் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், நுவான் பிரதீப் மற்றும் நுவான் குலசேகர அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், டில்ருவான் பெரேராவும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் அணி சார்பில் எவ்வித மாற்றங்களும் இருக்காது என தெரிவிக்கப்படுகின்றது.