பால் உற்பத்தியாளர்களுக்கு சேரவேண்டிய ஆறு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவிற்கு நடந்த கொடுமை

Published By: Raam

28 Mar, 2017 | 08:33 AM
image

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் வெள்ளை வானில் வந்தவர்கள் பால் லொறி ஒன்றினை வழி மறித்து சாரதியை தாக்கி விட்டு ஆறுலட்சத்து பதினெட்டாயிரம் ரூபா கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தலவாக்கலை பசும் பால் நிலையத்திலிருந்து தனது பால் சேகரிப்பாளர் வீட்டுக்கு பணத்தினை எடுத்து சென்று கொண்டிருந்து வேளையில் டொல்பின் ரக வெள்ளை வானில் வந்த சிலர் லொறிக்கு குறுக்காக வானினை நிறுத்தி தாங்கள் பினேன்ஸ் கம்பனியிலிருந்து வந்துள்ளதாகவும், இந்த லொறிக்கு தவணை பணம் செலுத்தாததால் இந்த லொறியினை கொண்டு செல்ல வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து லொறி சாவியினை எடுத்தாகவும் பின் இவர் கொண்டு வந்த பணம் பையினை எடுக்கும் போது கையை கூரிய ஆயுதத்தினால் தாக்கி காயப்படுத்தியதாகவும் பின் தலையில் கட்டையொன்றினால் தாக்கி லொறியினையும் பணத்தினை எடுத்து சென்றதாகவும் அதன்பின் பாதிக்கப்பட்டவர் பொலிஸ் விசாரணையின் பின் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட சாரதி ஆர்.சின்னையா தெரிவித்தார்.

லொறியினை எடுத்து சென்றவர்கள் சுமார் ஒரு கிலோ மீற்றர்வரை லொறியினை கொண்டு சென்று பணத்தினை மாத்திரம் எடுத்துக்கொண்டு லொறியினை வீதியோரத்தில் விட்டுச்சென்றுள்ளனர்.

கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்ட பணம் வட்டகொடை பசும் பால் உற்பத்தியாளர்களுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது வெள்ளை வானில் வந்தவர்கள் அரச உத்தியோகத்ததவர்கள் போல் உடை அணிந்திருந்ததாகவும் சுமார் ஐந்து பேர் வரை வேனில் இருந்தாகவும் பாதிக்கப்பட்டவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தலவாக்கலை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .சம்பவம் தொடர்பாக இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22