பல நீதிமன்றங்களால் பிடிவிறாந்துகள் பிறப்பிக்கப்பட்டிருந்த 'ரத்கம உதேஷ்' சிக்கினார்

27 Mar, 2017 | 04:00 PM
image

நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறிகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நீண்டகாலத்திற்கு பின்னர் நேற்று கதிர்காமத்தில் வைத்து கைது  செய்யப்பட்டுள்ளார். 

நாட்டின் பலப் பகுதிகளில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் குறித்த நபருக்கு எதிராக பல நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டிருந்த நிலையில் எட்டு பிடிவிறாந்துகளும்  பிறப்பிக்கப்பட்டிருந்தன.

சட்டவிரோத துப்பாக்கியை வைத்துக்கொண்டு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், குறித்த நபருக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கதிர்காமத்தில் வைத்து நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 கதிர்காமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபாலி காரியவசமிற்கு கிடைக்கப்பெற்ற அவசரத் தகவலொன்றினையடுத்து விரைந்த பொலிஸார், வீடொன்றில் மறைந்திருந்த நபரை கைது செய்துள்ளனர்.

'ரத்கம உதேஷ்”  என்றழைக்கப்படும் குறித்த நபர், போலி கடவுசீட்டை பயன்படுத்தி இந்தியா, சவூதி, நேபாளம் மற்றும் மாலைத்தீவு போன்ற நாடுகளுக்கு சென்று வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11