நவநாகரீக பெண்களுக்காக கூந்தல் பராமரிப்பு தெரிவுகளை அறிமுகம் செய்துவரும் ஹேமாஸ் மனுபக்டரிங் நிறுவனத்தின் முன்னணி கூந்தல் பராமரிப்பு வர்த்தகநாமமான குமாரிக்கா, அண்மையில் இயற்கையான மூலப்பொருட்களுடன் கூடிய பளபளப்பான ஆரோக்கியமான கூந்தலை அளிக்கும் வகையில் உயர்தரமான உற்பத்தி தெரிவுகளை அறிமுகம் செய்துள்ளது.

அழகிய கூந்தலைப் பெற விரும்பும் எல்லாப் பெண்களுக்கும் ஏற்ற வகையில், இந்தத் தெரிவுகளில் புதிய குமாரிக்கா ஹெயார் ஒயில் ஷாம்பூடன் தெரிவுகளுடனான புதிய கண்டிஷனர் வகைகள் மற்றும் புதிய ஹெயார் சேரம் போன்றவையும் உள்ளடங்கியுள்ளன.

“இக்கால பெண்களின் கூந்தல் சார்ந்த தேவைகளை ஹேமாஸ் நன்குணர்ந்துள்ளது. புதிய குமாரிக்கா அறிமுகம் செய்துள்ள ஒட்டுமொத்த கூந்தல் பராமரிப்பு தெரிவுகள் மூலமாக சகாயமான விலையில் கூந்தலுக்கு விசேட சிகிச்சையை வழங்குவதே எமது குறிக்கோள் ஆகும்.

சந்தையிலுள்ள ஏனைய வர்த்தகநாமங்களை போலல்லாது, இயற்கை மூலப்பொருட்களுடன் கூடிய ஒட்டுமொத்த கூந்தல் பராமரிப்பு தெரிவுகளை வழங்கி உள்நாட்டு வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்திசெய்ய எம்மால் முடிந்துள்ளது” என குமாரிக்கா வர்த்தகநாம முகாமையாளர் ரமில பெர்னாண்டோ தெரிவித்தார்.

இத்துறையில் சந்தை முன்னோடியாகவுள்ள குமாரிக்கா ஹெயார் ஒயில் என்பது இயற்கை நலன்களடங்கிய வர்த்தகநாமமாக உள்ளதுடன், அதன் பொதியிடல் மற்றும் சூத்திரங்கள் மீள சீரமைக்கப்பட்டுள்ளன.

குமாரிக்கா ஹெயார் ஒயில் ஆனது கூந்தல் உதிர்வு, கூந்தல் நுனி வெடிப்பு மற்றும் பொடுகு ஆகிய மூன்று பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் வகையில் அமைந்துள்ளது. குமாரிக்காவின் புதிய ஷம்பூ மற்றும் கண்டிஷனர் தெரிவுகள் ஒவ்வொரு குளியலின் போதும் ஸ்மார்ட் கண்டிஷனிங் தொழில்நுட்பம், அதிக நுரை மற்றும் சிறந்த நறுமணத்தை வழங்குவதுடன் கூந்தலுக்கு இயற்கை நலன்களை வழங்குகிறது.

ஆரோக்கியமான பிரகாசமான கூந்தல் பெண்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கிறது. 5x அடர்த்தியான கூந்தலை வழங்குவதாக ஆராய்ச்சிகள் மூலமாக நிரூபிக்கப்பட்ட பச்சை பாதாம் எண்ணெய் மற்றும் பழ விற்றமின்களுடன் கூடிய ‘Thick and Strong’ ஷம்பூ மற்றும் கண்டிஷனர் உங்கள் கூந்தலை மேம்படுத்த பொருத்தமானதாகும். அவகாடோ ஒயில் மற்றும் Shea வெண்ணெய் அடங்கிய ‘Soft and Shine’ஷம்பூ மற்றும் கண்டிஷனர் கூந்தலை மிருதுவாகவும் பிரகாசிக்கவும் செய்வதுடன் ஏழு எண்ணெய், குணநலன்கள் கொண்ட புதிய ‘Long and Black’ ஷம்பூ கூந்தலின் இயற்கையான கருமையை வெளிக்கொணருகிறது.

குமாரிக்காவின் புதிய சேரம் தெரிவு மூலமாக கூந்தலை ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் மீள சீரமைப்பதே குறிக்கோள் ஆகும். hair serum இயற்கை நலன்கள் மற்றும் சிறந்த மூலப்பொருட்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தெரிவு பிரகாசம், UV பாதுகாப்பு, frizz அற்ற தன்மை போன்றவற்றை உறுதிப்படுத்துகிறது.

‘Moisturizing and Frizz-Free’ சேரம் மற்றும் ஜொஜொபா மற்றும் லெவெண்டர் ஒயில் ஆகியன பிரகாசமான கூந்தலை வழங்குவதுடன் கூந்தல் நுனி உதிர்வை கட்டுப்படுத்துகிறது. ‘Black Shine’ ஒலிவ் மற்றும் கெமிலியா ஒயில் கொண்ட ‘ப்ளெக் ஷைன்’ தெரிவானது பளபளக்கும் கூந்தலை வழங்குகிறது.