நாட்பட்ட சிறுநீரகநோயை தடுப்பதற்கான 8 வழிமுறைகள்

Published By: Robert

27 Mar, 2017 | 12:25 PM
image

எம்மில் பலரும் தற்போது சர்க்கரை நோயாளிகளாகவும், அதனை மருந்து,மாத்திரைகளால் கட்டுப்படுத்துபராகவும் இருந்து வருகிறோம். இந்நிலையில் இவர்கள் நாட்பட்ட சிறுநீரக நோய்களுக்கு ஆளாகலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அத்துடன் அதிலிருந்து தங்களை தற்காத்துக கொள்ளவேண்டும் எனில் 8வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள். அந்த 8 வழிமுறைகள் என்னவென்பதைப் பார்ப்போம்.

உங்களுடைய இரத்த அழுத்தத்தை சரியான அளவில் பராமரிக்கவேண்டும். அதற்கேற்ற வகையில் உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடித்து மனதை ஆரோக்கியமாகவும், இயல்பாகவும் வைத்துக் கொள்ளவேண்டும்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டேயிருக்கவேண்டும்.நாட்பட்ட சிறுநீரக நோய்களுக்கு ஆளாகுபவர்களில் 50 சதவீதத்தினர் தங்களுக்கு ஏற்பட்ட இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தாதவர்கள் தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

ஒரு சிலருக்கு இரத்த அழுத்தமும், சர்க்கரைநோயும் இருக்கும். இவர்கள் தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.இவ்விரண்டையும் சரியான அளவுகளில் பராமரித்துக் கொண்டே கண்காணிக்கவேண்டும். இவர்களுக்கு இரத்த அழுத்தம் அதிகரித்தால் அது சிறுநீரகத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் இதயத்தின் செயல்பாடுகளையும் பாதித்துவிடக்கூடும்.

இவர்கள் சத்தான சரிவிகித உணவை சாப்பிடவேண்டும்.அதிலும் உப்பின் அளவில் கவனம் வேண்டும். இவர்கள் நாளாந்தம் ஒரு டீஸ்பூன் அளவிற்கும் குறைவாகவே உப்பை எடுத்துக் கொள்ளவேண்டும். ஹொட்டேல் உணவை முற்றாக தவிர்க்கவேண்டும்.

நாளொன்றிற்கு குறைந்த பட்சம் 2 லீற்றர் தண்ணீரையாவது அருந்தவேண்டும். அதனையும் சரியான அளவுகளிலும், சரியான நேரத்திலும் அருந்தவேண்டும். அப்போது தான் உடலில் சேர்ந்துள்ள சோடியம், யூரியா மற்றும் டாக்சின்களை சிறுநீரகம் வெளியேற்றும். சிலர் தண்ணீர் அதிகம் சாப்பிடாததால் தான் நாட்பட்ட சிறுநீரக நோய் தாக்கத்திற்கு ஆளாகிறார்கள்.

புகைப் பிடிப்பதை முற்றாக தவிர்க்கவேண்டும். ஏனெனில் 50 சதவீத அளவிற்கு நாட்பட்ட சிறுநீரக நோய்களுக்கும், சிறுநீரக புற்றுநோய்க்கும் புகைபிடிப்பது தான் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

வலிநிவாரணிகளைத் தொடர்ந்து சாப்பிடக்கூடாது. அதையும் கடந்து சாப்பிட்டால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

இதையும் கடந்து சிறுநீர் கழிப்பதிலோ அல்லது சிறுநீரகத்தின் செயல்பாட்டில் ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தாலோமருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின் அடிப்படையில் சரியான முறையில் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

இந்த 8 வழிமுறைகளையும் பின்பற்றினால் நாட்பட்ட சிறுநீரக நோய்களை கட்டுப்படுத்திக் கொண்டே குணப்படுத்தலாம்.

Dr. பி சங்கர்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29