ஸாஹிரா கல்­லூ­ரி­யு­டனான றக்பி போட்­டியில் இறுதி நேர பெனால்­டியின் உத­வி­யுடன் 32 – 29 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் கொழும்பு உவெஸ்லிக் கல்­லூரி வெற்­றி­பெற்­றது. 

பாட­சாலை அணி­க­ளுக்­கி­டை­யி­லான றக்பித் தொடர் தற்­போது நடை­பெற்­று­ வ­ரு­கின்­றது. பல சர்ச்­சை­க­ளுடன் நடை­பெற்­று­வரும் இந்தத் தொடரின் ஆரம்­பத்தில் அணி­க­ளுக்­கி­டையில் மோதல்கள் ஏற்­பட்­டதால் விளையாட்­டுத்­துறை அமைச்சு பாட­சாலை றக்பி சங்­கத்­திற்கு தமது கண்­ட­னங்­களை தெரி­வித்­தி­ருந்­தது.

போட்­டி­க­ளுக்கு நடு­வர்­களை அனுப்ப வேண்டாம் என்றும் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர அப்­போது அறி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் லொங்டன் மைதா­னத்தில் கடந்த சனிக்­கி­ழமை உவெஸ்லிக் கல்­லூரி அணிக்கும் ஸாஹிரா கல்­லூரி அணிக்­கு­மி­டை­யி­லான போட்டி நடை­பெற்­றது.

கடந்த வாரம் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்­லூ­ரியை இல­கு­வாக வெற்­றி­கொண்­டி­ருந்த நிலையில் ஸாஹிரா கல்­லூரி இப்­போட்­டியில் வெற்­றியை எதிர்­பார்த்து கள­மி­றங்­கி­யது. மறு­மு­னையில் உவெஸ்லிக் கல்­லூ­ரி­யா­னது விஞ்­ஞான கல்­லூ­ரியை இல­கு­வாக வென்ற நிலையில் நம்­பிக்­கை­யுடன் கள­மி­றங்­கி­யது.

போட்­டியின் ஆரம்­பத்­தி­லிருந்து இரு அணி­களும் பல தவ­று­களை செய்து எதிர் அணிக்கு பெனால்டி வாய்ப்­பு­களை வழங்­கின. அவ்­வாறு முதலில் தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்­ப­டுத்­திக்­கொண்ட உவெஸ்லி கல்­லூரி அணியின் அவிஷ்க லீ தமது அணிக்­காக 3 புள்­ளி­களை பெற்­றுக்­கொ­டுத்தார். சிறிது நேரத்தின் பின்னர்இ செயிட் சிங்­ஹ­வன்­சவும் கிடைத்த பெனால்டி வாய்ப்­பினை பயன்­ப­டுத்தி ஸாஹிரா கல்­லூரி அணிக்கு 3 புள்­ளி­களை பெற்­றுக்­கொ­டுத்தார். 

தொடர்ந்து இரு அணி­களும் கடு­மை­யாக மோதிக்­கொண்­டன. உவெஸ்லி கல்­லூ­ரி­யா­னது பாரிய முயற்­சியின் பின்னர் டயஸ் மூல­மாக முதல் ட்ரையினை பெற்­றுக்­கொண்­டது. லைன் அவுட் மூலம் பந்தை பெற்­று­கொண்ட உவெஸ்லி கல்­லூ­ரி­யா­னது ரோலிங் மோல் மூலம் ட்ரை வைத்­தது. அவிஷ்க லீ கொன்­வெர்­சனை வெற்­றி­க­ர­மாக உதைத்தார். (வெஸ்லி கல்­லூரி 10 – ஸாஹிரா கல்­லூரி 15)

போட்­டியின் முதல் பாதியில் உவெஸ்லி கல்­லூரி 10 – ஸாஹிரா கல்­லூரி 15 என நிறை­வ­டைய அடுத்த சுற்றில் மிகவும் வேக­மா­கவும் அபா­ர­மா­கவும் ஆடிய உவெஸ்லிக் கல்­லூரி அணி போட்­டியை தம் பக்கம் திருப்பியது. போட்டியின் இறுதியில் 32 – 29 என ஸாஹிராவை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது உவெஸ்லிக் கல்லூரி அணி.