வத்தளை, ஏக்கித்தை பகுதியில் 19 வயதுடைய இளைஞனொருவன் தாக்கப்பட்டு உயிழந்துள்ளதாக வத்தளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த இளைஞர் கண்டி, நித்தவெலையை பிறப்பிடமாகவும் ஒபல்கல்ல தோட்டம் மாத்தளையைச் சேர்ந்தவரெனவும் தெரிவிக்கப்படுகின்றுது.

சம்பவதினம் குறித்த இளைஞன் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் காதல் விவகாரமே இக் கொலைக்கு காரணம் எனவும் சந்தேகிக்கும் பொலிசார் குறித்த இளைஞன் காலித்த பெண்ணின் சகோதரர்கள் மீது சந்தேகமுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இளைஞன் காதலித்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுவிட்டு தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு முச்சக்கரவண்டியில் வந்து இறங்கிய நிலையிலேயே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஒருவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாக தெரிவிக்கும் வத்தளை பொலிஸார் கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கொலை செய்யப்பட்ட இளைஞன் மதுபோதையில் இருந்த காரணத்தால் சடலத்தின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.