பிறந்துள்ள 2016 ஆம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று நடைபெறவுள்ளது.

இன்றையதினம் புதிய அரசியல் யாப்பினை தயாரிப்பதற்காக, நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றும் நடவடிக்கை இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.

அத்துடன் இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பாராளுமன்றத்தில் விஷேட உரையாற்றவுள்ளார்.