பாரிஸில் நிகழ்த்­தப்­பட்ட பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவி­ர­வா­தி­கள்தான் காரணம் என்று பிரான்ஸ் ஜனா­தி­பதி ஹாலண்டே குற்­றம்­ சாட்­டி­யுள்ளார். பிரான்ஸ் தலை­நகர் பாரிஸில் நேற்று அதி­காலை தீவிர­வா­திகள் 8 குழுக்­க­ளாகப் பிரிந்து தாக்­கு­தலை நடத்­தினர்.


உலகை உலுக்­கிய இத்­தாக்­குதல் சம்­பவம் குறித்து கருத்து தெரி­வித்த பிரான்ஸ் ஜனா­தி­பதி ஒலான்டே, பிரான்ஸ் மீது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் யுத்­தத்தை நடத்­தி­யுள்­ளனர். வெளி­நாட்டில் நன்கு திட்­ட­மி­டப்­பட்டு உள்­நாட்டு ஆத­ர­வுடன் இந்தத் தாக்­குதல் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.
இதற்கு நிச்­சயம் பதி­லடி கொடுப்போம். 2 ஆம் உலகப் போருக்குப் பின்னர் பிரான்ஸில் நிகழ்த்­தப்­பட்ட மிக பயங்­கர தாக்­குதல் இதுவாகும்.
இந்த தாக்­கு­தலில் 155 பேர் பலி­யா­கி­யுள்­ளனர். இத்­தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­தோ­ருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என் றும் தெரிவித்துள்ளார்.