கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் இன்று முற்பகல் ஒருதொகுதி வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு  கிடைக்கப்பெற்ற  இரகசியத்தகவலுக்கு அமைய,  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கிளிநொச்சி பொலிஸ்  நிலைய  தலைமைப் பொலிஸ் அத்தியட்சகர், தர்மபுரம்  பொலிஸ்  நிலையப்  பொறுப்பதிகாரி, கிளிநொச்சி குற்றத்தடகவியல்  பொலிஸார்  ஆகியோர் நெத்தலியாறு பகுதிக்குச் சென்று ஆற்றின் நடுவே பை ஒன்றில் வெடிபொருள்கள் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

இருப்பினும்  குறித்த வெடிபொருள் என்ன என்பது தொடர்பில் ஆராயவும் அதனை  மீட்கவும்  பொலிஸ்  விசேட  அதிரடிப்படையினரின் உதவி கோரப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் இன்னமும் மீட்கப்படவில்லை. 

இருப்பினும் அப்பையினுள் மூன்று அல்லது நான்கு மோட்டார் வகைக் குண்டுகள் இருக்கலாம் என  பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.