பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று செய்த ஆய்வின் மூலம், எதிர்வரும் 15 வருடங்களில், அந்நாட்டில் மாத்திரம் 1 கோடி பேர் ரோபோக்களால் வேலையிழக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

பிரிட்டனின் முன்னணி தொழிநுட்ப ஆலோசனை நிறுவனங்களில் ஒன்றான பி.டபிள்யு,சி (P.W.C) எனும் நிறுவனம், அந்நாட்டு தொழில் துறைகளில் 30 சதவீதம் ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதாகவும், எதிர்வரும் 15 வருடங்களில் சுமார் 1 கோடி பேரின் வேலைவாய்ப்புகளை, ரோபோக்கள் செய்யக்கூடிய அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் மேலைத்தேய நாடுகளில் அதி நவீன தொழில்நுட்ப ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவை மனித உழைப்பை குறைத்து, பல்வேறு துறைகளின் பணிகளை, இயந்திரமயமாக்கியுள்ளதாக பி.டபிள்யூ.சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அத்தோடு பிரிட்டனில் தற்போது 22 இலட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் 10 இலட்சத்து 20 ஆயிரம் பணியிடங்கள் ரோபோக்களின் பயன்பாட்டினால், ஆபத்தான நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும் குறித்த நிறுவனம் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.