சக வீரர்களுக்காக குளிர்பானம் ஏந்தி வந்த விராட் கோலி!

Published By: Devika

25 Mar, 2017 | 02:46 PM
image

போட்டி இடைவேளையின்போது சக அணி வீரர்களுக்கு குளிர்பானம் எடுத்துச் சென்ற விராட் கோலியின் செயலை இலட்சக்கணக்கானோர் பாராட்டிவருகின்றனர்.

இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இன்று தொடங்கியது. ஏற்கனவே இடம்பெற்ற மூன்று போட்டிகளுள் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. மூன்றாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இதனால், தற்போது நடைபெற்று வரும் போட்டி தொடரை நிர்ணயிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக மாறியுள்ளது. போட்டியின் முதல் நாளான இன்று, நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. 

மூன்றாவது போட்டியின்போது தோள் உபாதைக்குள்ளான அணித் தலைவர் விராட் கோலி, போதிய உடல் தகுதி பெறாததால் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. என்றாலும், அவர் செய்த ஒரு சிறு செயல், போட்டியில் விளையாடியதற்கு இணையாக இலட்சக்கணக்கானோரின் பாராட்டைப் பெற்று வருகிறது.

ஆட்டத்தின் முதல் பாதியில் குளிர்பான இடைவேளை அறிவிக்கப்பட்டது. அப்போது யாரும் சற்றும் எதிர்பார்த்திராத வகையில், குளிர்பானங்களைக் கையில் ஏந்தியபடியே களத்தினுள் நுழைந்தார் விராட் கோலி. பன்னிரண்டாவது ஆட்டக்காரர்களே செய்யும் இந்தப் பணியை, அதற்குரிய ஆடை விதிமுறைகளுடன் கோலி மேற்கொண்டது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியைத் தந்தது.

கைகளில் குளிர்பானத்துடன் கோலி நுழைவதைக் கண்ட ரசிகர்கள் மைதானமே அதிரும் வகையில் கூக்குரலிட்டு தமது குதூகலத்தை வெளிப்படுத்தினர். களத்தில் இருந்த வீரர்கள் கூட கோலியின் வருகையை எதிர்பார்த்திருக்கவில்லை.

இந்தக் காட்சியைக் கண்ட அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான பிரெட் லீ, “உலகின் மிகப் பெறுமதி வாய்ந்த குளிர்பானப் பையன் (Drinks Boy) கோலியாகத்தான் இருக்கவேண்டும்” என்று நகைச்சுவையாக வர்ணித்தார்.

இந்தச் செய்தி சமூக வலைதளத்தில் ஒரு சில நிமிடங்களில் இலட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டது. இன்னும் வேக வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. என்ன நடந்தபோதும் கோலியை களத்தை விட்டு விலக்கிவிட முடியாது என்று அவரது இரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31