டிரம்பின் திட்டம் தோல்வி..!

Published By: Selva Loges

25 Mar, 2017 | 01:24 PM
image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், முன்னாள் ஜனாதிபதி பாராக் ஒபாமாவின் சுகாதார காப்பீட்டு திட்டத்தை புறக்கணித்து உருவாக்கிய புதிய திட்டம் தோல்வியடைந்துள்ளது.  

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் 'ஒபாமா கேர்’ திட்டத்திற்கு மாற்றிடாக, டிரம்ப் உருவாக்கிய புதிய திட்டம் பாராளுமன்ற அனுமதிக்காக பிரேரிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றது தோல்வியை தழுவியுள்ளது. 

மேலும் குறித்த 'ஒபாமா கேர்' திட்டத்தின் மூலம் குறைந்தளவான செலவில், தரமான மருத்துவ சிகிச்சை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்ததால் அந்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. 

இந்நிலையில் குறித்த திட்டத்தை தடை செய்து புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை டொனால்ட் டிரம்ப் பாராளுமன்ற விவாதத்திற்காக சமர்ப்பித்திருந்தார். விவாதம் முடிந்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் குறித்த திட்டமானது தோல்வியுற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 

குறித்த வாக்கெடுப்பில் 215 வாக்குகள் பெற்றால் திட்டம் நிறைவேறக்கூடிய நிலை காணப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்சபைகளில், ஆளும் குடியரசு கட்சி உறுப்பினர்களே அதிகமாக இருந்துவந்த நிலையில் டிரம்பின் திட்டம் தோல்வியை தழுவியுள்ளமை சர்வதேச ஊடகங்களின் விமர்சனத்தை பெற்றுள்ளது.

அத்தோடு கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில், ‘ஒபாமா கேர்’ திட்டத்தை மீளப் பெறுவேன் என டிரம்ப்கூறிவந்த நிலையில், தற்போது அவர் அறிமுகப்படுத்திய புதிய திட்டத்தை மீளப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33