மட்டு. மதுபான உற்பத்தி தொழிற்சாலைக்கு அனுமதி அளித்தவர் யார்? விமர்சிப்பதோடு நின்று விட வேண்டாம் என்கிறார் மட்டு. ஆயர்

Published By: Priyatharshan

25 Mar, 2017 | 10:03 AM
image

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் மது­பான உற்­பத்தி தொழிற்­சா­லைக்கு அனு­மதி அளித்த உயர் அதி­கா­ரி­களும் அதன் பிண்­ணி­யி­லுள்ள அர­சியல் பிர­மு­கர்­களும் யார் என்­பது வெளிவ­ர­வில்லை. இவை வெளிக் கொண­ரப்­பட வேண்டும். கிழக்கின் முத­ல­மைச்­சரும், வெளிநாட்டு மூல­தன ஊக்­கு­விப்பு அமைச்­சரும் இவைகள் தங்­க­ளுக்கு தெரி­யா­தென கைவி­ரிக்­கின்­றனர். இது நாட­கமா? யதார்த்­தமா? என்­பது மக்­க­ளுக்கு புரி­யாத புதி­ராக இருக்­கி­றது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் விமர்­சிப்­ப­தோடு நின்று விடக் கூடாது  என மட்­டக்­க­ளப்பு மறை­மா­வட்ட ஆயர் அதி. வண. கலா­நிதி ஜோசப் பொன்­னையா ஆண்­டகை தெரி­வித்தார்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் இடம் பெற்று வரு­கின்ற செயற்­பா­டுகள் நல்ல மனம் கொண்­ட­வர்­க­ளுக்கு உகந்­த­தாக இல்லை. இச்செயற்­பா­டுகள் காலப்­போக்கில் இம் மாவட்­டத்தை அழித்தும், ஒழித்தும் விடக்­கூடும். இது சம்­பந்­த­மாக ஆயர் ஊட­கங்­க­ளுக்கு அளித்த அறிக்­கை­யிலே இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். 

அதில் ஆயர் மேலும் தெரி­விக்­கையில்,

மாகாண நிர்­வா­கத்தின் கீழ் தொழிற்­சா­லைகள் ஆரம்­பிப்­ப­தற்கு அதி­காரம் அளிப்­பதும், காணி அதி­கா­ரமும் உரித்­தாக்­கப்­பட்­டுள்­ளது. ஒரு தொழிற்­சாலை அமைப்­ப­தற்கு இவ் இரு அனு­ம­தியும் அவ­சியம். இவ் அனு­ம­தி­களை வழங்க வேண்­டிய முத­ல­மைச்சர் தனக்கு இவ் விடயம் தெரி­யாது எனக் கூறு­வது ஒரு வியப்­பான காரியம். இவ் இரு அனு­ம­தி­களும் இல்­லாது தொழிற்­சாலை கட்­டுப்­பட முடி­யாது. ஆனால் கட்­டப்­ப­டு­கி­றது. ஆதலால், அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது என்­பதே நிஜம். 

அரசு, கிழக்கின் பாரிய தொழிற்­சா­லை­யான காகித தொழிற்­சா­லையை அழிய விட்­டு­விட்டு பரா­மு­க­மாக இருக்­கி­றது. அதே நேரத்தில், மக்­களை அழிக்கும் மது­பான தொழிற்­சா­லைக்கு அனு­ம­தியும் ஊக்­கு­விப்பும் அளித்­ததை நினைத்து கவ­லை­ய­டைய வேண்­டி­யுள்­ளது. இவ் அரசு மக்­களை காப்­பாற்றி அவர்­களின் அந்­தஸ்­தையும் கௌர­வத்­தையும் உயர்த்த முற்­ப­டாது போல் தோன்­று­கி­றது.

எமது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தங்­க­ளது காலத்­தையும் நேரத்­தையும், செயல்­க­ளையும் அதன் விளை­வு­க­ளையும் விமர்­சிப்­ப­தி­லேயே கடத்­து­கின்­றனர். இது ஒரு ஆரோக்­கி­ய­மான செயற்­பா­டா­காது. மக்­களின் சேவ­கர்கள் மக்­க­ளுக்கு ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டு­க­ளையே செய்ய வேண்டும். விமர்­சிப்­பதை மக்கள் கேட்­பார்கள். அது அவர்­க­ளுக்கு தற்­கா­லிக சந்­தோ­சத்தை அளிக்கும். 

ஆனால் மக்கள் அதனால் மேம்­பாடு அடை­வார்­களா என்­பது சிந்­திக்க வேண்­டிய விடயம். பாரிய அள­வி­லான இறால் பண்­ணை­கைளை அரச செலவில் ஆரம்­பித்து மக்­க­ளுக்கு இனா­மாக வழங்­கு­வ­தற்கு கடற்­றொழில் அமைச்சர் முன் வந்த போது அத்­திட்டம் வேண்டாம் என்று போரா­டி­னீர்கள், எதிர்த்­தீர்கள் அது போன்று மது­பான தொழிற்­சாலை வேண்டாம் என்­கி­றீர்கள்.

எல்­லா­வற்­றையும் எதிர்ப்­பதும் விமர்­சிப்­பதும் இல­கு­வா­னது. பிழை­யா­னதை எதிர்ப்­பதில் தவ­றேதும் இல்லை. மக்­க­ளுக்கு தொழில் வாய்ப்பை, இலா­பத்தை, சௌக­ரிய வாழ்க்­கையை வழங்­கவும் அபி­வி­ருத்தி காணவும் திட்­டங்கள் வேண்டும். அவைகள் உங்­களால் ஆரம்­பிக்­கப்­பட வேண்டும். 

கடந்த காலங்­களில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் பதவி வகித்த எம்­ம­வர்கள் செய்த சேவைகள் நினைவு கூரத்­தக்­க­வைகள். நல்­லையா மாஸ்டர், இராஜன் செல்­வ­நா­யகம், தேவ­நா­யகம், சொல்லின் செல்வன் இரா­ஜ­துரை அந்த வகையில் மறக்க முடி­யா­த­வர்கள். உங்கள் பதவிக் காலத்­தையும், நீங்கள் தொடங்­கிய வேலைத்­திட்­டங்­க­ளையும் அவை­களால் வழங்­கப்­படும் பொரு­ளா­தார சமூக நல அபி­வி­ருத்­தி­க­ளையும் கணக்­கிட்டு பாருங்கள். உங்கள் பெறு­பே­று­களை நீங்­களே அறிய முடியும். 

பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட வரவு செல­வுத்­திட்ட நிதியை கிராமம் கிரா­ம­மாக பங்­கீடு செய்­வ­தற்கே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி என மட்­டுப்­ப­டுத்­த­லா­காது. வடக்கு மாகா­ணத்­த்தை பாருங்கள் அங்கு வெளிநாட்டு தூது­வர்­களும் புலம் பெயர் அமைப்­புக்­களும் தங்கி நின்று அபி­வி­ருத்தி பணி­களில் ஈடு­ப­டு­கி­றார்கள். இங்கு கிழக்கு  வெறிச்­சோடிப் போய் கிடக்­கி­றது 

கிழக்கில் காணி வழங்கும் அதி­காரம் மாகாண சபைக்கு உரி­யது. வாகரைப் பிர­தே­சத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் காணிகள் கொழும்பில் உள்ள கோட்டுச் சூட்டுப் போட்­ட­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் யோகேஸ்­வரன் பட்டி தொட்­டி­யெல்லாம் பிர­சாரம் செய்­கிறார். அவர் கூறி­யதில் உண்­மைகள் நிறைந்­துள்­ளது.  அவர் யாருக்கும் விலை போகா­தவர், பல் இழிக்­கா­தவர். 

ஐக்­கியத் தேசியக் கட்­சியின் அர­சியல் வாதிகள் தமது உழைப்­பிலே அக்­கறை காட்­டு­கி­றார்கள். அவர்­க­ளு­டைய தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வாழைச்­சேனை காகித தொழிற்­சா­லையை மூடி விடும் பட­லத்தை ஆரம்­பித்­துள்ளார். 

அப்­படி மூடும் போதுஇ அக் காணி­களை கைய­கப்­ப­டுத்த அயலில் உள்ள ஆயிரம் ஆயிரம் பேர் காத்­தி­ருக்­கி­றார்கள். தொழிற்­சா­லைக்கு பொறுப்­பான அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் இதற்கு உடந்­தையா? உத­வியா? என்று புரி­ய­வில்லை.  சீன அரசு இதன் புன­ருத்­தா­ர­ணத்­திற்கு சகல உத­வி­களை வழங்க காத்­தி­ருக்கும் போது அமைச்­சரும் பிர­த­மரும் அர்த்­த­மற்ற செயற்­பா­டு­களில் இறங்­கி­யி­ருப்­பது ஏன் என்று தெரி­ய­வில்லை.

மட்­டக்­க­ளப்பின் ஒரு சில உயர் அதி­கா­ரி­களும், அர­சியல் பிர­மு­கர்­களும் மட்­டக்­க­ளப்பை விழுங்கி ஏப்பம் விடக்­காத்­தி­ருப்­பது போல் தெரி­கி­றது. இவர்­க­ளுக்கு எதி­ராக மக்கள் ஜன­நா­யக ஆர்ப்­பாட்­டத்­தையும் ஊர்­வ­லத்­தையும் ஏற்­ப­டுத்த வேண்டும். அவர்­களின் உருவப் பொம்­மை­களை வீதியில் போட்டு எரிக்க வேண்டும் அப்­போது தான் அவர்கள் திருந்­து­வார்கள். அத்­தோடு இம் மாவட்­டத்­தையும் விட்டு அக­லு­வார்கள். 

ஊட­க­வி­ய­லா­ளர்கள் சாதாரணமாக மக்களின் குறை நிறைகளையும் அவர்களுக்கு ஏற்படும் இன்ப துன்பங்களையும் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுபவர்கள். மதுபான தொழிற்சாலையால் அவ் இரு ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டிருக்கலாம் என்று மக்கள் சந்தேகப்ப டுகிறார்கள். உண்மையை வெளிக்கொணர முயற்சிக்கும் ஊடகவியலாளர்களை தாக்குவது என்பது ஒரு மிலேச்சத்தனமான செயல். 

தாக்கியவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. அரசும் அரச உயர் அதிகாரிகளும் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று அவ்வூடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51