ஜெனி­வாவில் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையின் வெற்­றி­க­ர­மான அமு­லாக்கம் தொடர்பில் அறிக்கை சமர்ப்­பிக்க வேண்டும் என புதிய பிரே­ரணை ஊடாக அர­சாங்­கத்­துக்கு கொடுத்­துள்ள கால வரை­ய­றையை வர­வேற்­பதாக என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு  தெரி­வித்­துள்­ளது.

ஐ.நா.மனி­த ­உ­ரி­மை­ பே­ர­வை­யில் ­நி­றை­ வேற்­றப்­பட்ட 34/L 1 பிரே­ர­ணை­ தொ­டர்­பாக விடுத்­துள்ள அறிக்­கை­யி­லே­யே ­மேற்­கண்­டவா­று கு­றிப்­பிட்­டுள்­ளது. 

அதில் ­மே­லும் ­தெ­ரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பா­னது, இலங்­கையில் நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல், மற்றும் மனித உரி­மை­களை ஊக்­கு­விக்கும் முக­மாக 2015 ஆம் ஆண்டின் 34/L 1 பிரே­ர­ணையை முழு­வ­து­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தனை வலி­யு­றுத்தும்  ஐ. நா. மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட 34/L 1,  பிரே­ர­ணையை வர­வேற்­கி­றது. 

மேலும் இந்த 34/L 1 பிரே­ர­ணையில், இலங்கை அர­சாங்­கத்­திற்கும் மனித உரிமை உயர்ஸ்­தா­னிகர் அலு­வ­ல­கத்­திற்கும், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்­டு­களில் ஐ.நா.மனித உரிமை பேர­வையில், 34/L 1 பிரே­ர­ணையின் வெற்­றி­க­ர­மான அமு­லாக்கம் தொடர்பில் அறிக்கை சமர்ப்­பிக்க வேண்டும் என கொடுத்­துள்ள கால வரை­ய­றை­யையும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பா­னது வர­வேற்­கி­றது.

எனவே, இந்த பிரே­ர­ணைகள் தொடர்பில் இலங்கை அர­சாங்கம் வழங்­கிய தனது வாக்­கு­று­தி­களை மதிக்க வேண்டும் எனவும்  இந்த பிரே­ர­ணை­க­ளைளின் உள்­ள­டக்­கங்­களை அவற்றில் உள்­ள­வாறே நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் எனவும் நாம் அர­சாங்­கத்தை வலி­யு­றுத்த விரும்­பு­கிறோம். மேலும் அர­சாங்­க­மா­னது காணி விடு­விப்புஇ தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை, காணா­மற்­போ­னோரின் குடும்­பங்­களின் அங்­க­லாய்ப்­புகள், மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­குதல் போன்ற விட­யங்­களில் இதய சுத்­தி­யுடன் செயற்­பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்க விரும்­பு­கிறோம்.

தமிழ் மக்கள் தமது பொறு­மையின் எல்­லையை அடைந்­து­விட்­டார்கள், எனவே இந்த விட­யங்கள் தொடர்­பி­லான அவர்­க­ளது இடர்­க­ளுக்கும்இ வேத­னை­க­ளுக்கும் கூடிய விரை­விலே ஒரு முடிவு காணப்­ப­ட­வேண்டும் என்­ப­த­னையும் நாம் வலி­யு­றுத்­து­கிறோம். 

மேற்­கு­றித்த விட­யங்­களை அடைந்து கொள்­வதில் சர்­வ­தேச சமூ­கத்தின் தொடர்ச்­சி­யான பங்­க­ளிப்­பையும் ஒத்­தா­சை­க­ளையும் நாம் வர­வேற்­கிறோம். தமிழ் பேசும் மக்­களின் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தி­நி­திகள் என்ற வகையில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பா­னது  இலங்­கையில் நிலை­மாற்று நீதி மற்றும் நல்­லி­ணக்கம் தொடர்­பி­லான ஐ.நா.வின் பரிந்­துரை மற்றும் பரிந்­து­ரைக்­கப்­பட்ட நடை­மு­றை­களின் செய­லாக்கம் தொடர்பில் தொடர்ந்தும் அர்ப்­ப­ணிப்­புடன் பங்­காற்­று­வ­திலும் கண்­கா­ணிப்­ப­திலும் ஆக்­க­பூர்­வ­மாக செயற்­படும் என்­ப­த­னையும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். 

இந்த பிரேரணையின் அமுலாக்கத்தின் பலன்களை பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக் கொள்வதனை உறுதி செய்வதற்கான  அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் ஐக்கிய நாடுகள்இ மனித உரிமை பேரவை, மற்றும் சர்வதேச சமூகம் என்பன  எடுக்க வேண்டும் எனவும் நாம் கேட்டுக்கொள்ள விரும்புகிறோம்.