இலங்கை மற்றும் பங்­க­ளாதேஷ் அணிகள் மோதும் மூன்று போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று தம்­புள்ளை ரங்­கிரி சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் இரவு - பகல் போட்­டி­யாக நடை­பெ­ற­வுள்­ளது.

இலங்­கைக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்ள பங்­க­ளாதேஷ் அணி இலங்கை அணி­யுடன் இரண்டு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி­யது. 

இந்தத் தொடரின் முதல் போட்­டியில் இலங்கை அணியும் இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியில் பங்­க­ளாதேஷ் அணியும் வெற்­றி­பெற்­றி­ருந்­தன. 

இந்தத் தொடரின் இரண்­டா­வது போட்­டி­யா­னது பங்­க­ளாதேஷ் அணிக்கு நூறா­வது போட்­டி­யாகும்.

இந்தப் போட்­டியில் வர­லாற்று வெற்­றியைப் பதி­வு­செய்த பங்­க­ளாதேஷ் அணி முதல் முறை­யாக இலங்கை வெற்­றி­கொண்டும் சாதனை படைத்­தது.

இந்­நி­லையில் இவ்­விரு அணி­களும் மோதும் ஒருநாள் தொடர் இன்று ஆரம்­ப­மா­கின்­றது.

டெஸ்ட் தொட­ருக்­கான இலங்கை அணிக்கு ரங்கன ஹேரத் தலை­மை­யேற்­றி­ருந்தார். அதேபோல் ஒருநாள் தொடரில் மோதும் இலங்கை அணிக்கு உபுல் தரங்க தலை­மை­யேற்­கிறார். 

இலங்கை அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் கடந்த சில மாதங்­க­ளாக காயம் கார­ண­மாக போட்­டி­க­ளி­லி­ருந்து வில­கி­யுள்ளார்.

இந்தத் தொட­ரிலும் அவர் விளை­யா­ட­வில்லை. எதிர்­வரும் இரு­ப­துக்கு 20 போட்­டி­களில் அவர் ஆடு­வாரா என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

உபுல் தரங்க தலை­மை­யி­லான இலங்கை அணியும் கடந்த சில போட்­டி­களில் குறிப்­பி­டத்­தக்­க­ளவு வெற்­றி­களை பதி­வு­செய்­தி­ருக்­கின்­றன. 

இன்­றைய போட்­டிக்கு நீண்ட நாட்­க­ளுக்குப் பிறகு திஸர பெரேரா, குசல் ஜனித் பெரேரா மற்றும் மிலிந்த சிறி­வர்­தன ஆகியோர் அணியில் இணைத்துக் கொள்­ளப்­பட்­டுள்­ளனர்.

இலங்கை அணி தற்­போது இளம் வீரர்­களை கொண்டு கள­மி­றங்­கு­கி­றது. உபுல் தரங்க. திஸர பெரேரா. சந்­திமால் ஆகி­யோரை தவிர்த்து பார்த்தால் குறைந்த அளவு அனு­பவம் உள்ள வீரர்­களே அணியில் இடம்­பெற்­றுள்­ளனர்.

அதேபோல் மொர்­டாஸா தலை­மை­யி­லான பங்­க­ளாதேஷ் அணியும் பல­மா­கன அணி­யா­கத்தான் திகழ்­கி­றது. இளம் பந்­து­வீச்­சாளர் முஸ்­த­பிஸுர் ரஹ்மான் அணியில் இடம்­பெற்­றி­ருப்­பது அணிக்கு பலமே.

நூறா­வது டெஸ்ட் போட்­டியில் வெற்றிபெற்ற உற்சாகத்தில் இருக்கிறது பங்களாதேஷ் அணி. அதேபோல் டெஸ்டில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை. அல்லது டெஸ்ட் வெற்றியை ஒருநாள் தொடரிலும் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.