சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பை உருவாக்காமல் இருப்பது கவலையளிக்கிறது : டியூ குணசேகர 

Published By: Ponmalar

24 Mar, 2017 | 09:23 PM
image

நாடு சுதந்திரம் அடைந்து எழுபது வருடங்களை அண்மித்தும் சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பை ஏற்படுத்த முடியாமல் போயுள்ளமை கவலைக்குரிய விடயமாகும். அதனால் அனைத்து கட்சிகளும் அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதை சிறந்த சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அத்துடன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்படவேண்டும் என்பதுவே எமது நிலைப்பாடாகும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

பாராளுமன்றத்தில் இருக்கும் அனைத்து இன கட்சிகளும் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதற்கு ஏகமானதாக திர்மானம் நிறைவேற்றின. அதனடிப்படையில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக  ஆராய்வதற்கு குழுக்கள் அமைத்து கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. தற்போது அந்த பணிகள் நிறைவடைந்து சட்டமூலம் தயாரிக்க இருக்கின்றது. ஆனால் சட்டமூலம் தயாரிக்கப்பட முன்பே அரசியலமைப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. 

அரசியலமைப்பில் ஏற்படுத்தக்கூடிய திருத்தத்தில் யாருக்காவது பாதிப்பு ஏற்படுவதாக இருந்தால் அதனை பாராளுமன்றத்தில் முன்வைத்து அது தொடர்பாக திருத்தங்களை மேற்கொள்ளலாம். ஆனால் தற்போது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் கருத்து வேறுபாடுகள் வீணாக காலத்தை தாழ்த்துவதாகும் அத்துடன் அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்படவேண்டும் என்பதுவே எமது கட்சியின் நிலைப்பாடாகும். அதனை நாங்கள் தெளிவாக தெரிவித்துள்ளோம்.

அத்துடன் நாட்டில் இருக்கும் இனப்பிரச்சினைக்கு அரசியலமைப்பினூடாக தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். அதுவும் காலாகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினையாகும். குறிப்பாக சிங்கள மொழி 1956ஆம் ஆண்டு அரச கரும மொழியாதக்கப்படுகின்ற போதும் 1987ஆம் ஆண்டே தமிழ் மொழி அரசகரும மொழியாக்கப்படுகின்றது. அத்துடன் தமிழ் மொழி அரசகரும மொழியாக நிறைவேற்றப்பட்டு 30 வருடங்கள் கழிந்தும் இன்னும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தவில்லை. அதனால் நாட்டு மக்கள் அனைவரும் சம உரிமைகளைப்பெற்றவர்கள் என்பது தெளிவாவதில்லை.

இவ்வாறான பிரச்சினைகள் இருப்பதால்தான் வெளிநாட்டவர்கள் எமது நாட்டுக்குள் தலையிட சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. காலனித்துவ வாதிகள்  நாட்டுக்குள் நுழைவதற்கு இவ்வாறான பிரச்சினைகள் காரணமாகின்றன. அதனால் சிறுபான்மை இன மக்களும் இந்த நாட்டு பிரஜைகள் என்றவகையில் அவர்களுக்கும் அரசியலமைப்பினூடாக சம உரிமை வழங்கப்படவேண்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவேண்டும். அத்துடன் நாட்டுக்குள் இன, மதங்களுக்கிடையில் பிரச்சினை ஏற்படுமானால் நாட்டை ஒருபோதும் அபிவிருத்தியின்பால் இட்டுச்செல்ல முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08