ரத்துபஸ்வெல துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 3  இராணுவ அதிகாரிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர்களை எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த இராணுவ அதிகாரிகள் இன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2013 ஆம் ஆண்டு ரத்துபஸ்வெல வெலிவேரிய சந்தியில் குடிநீர் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டதனால் மூவர் உயிரிழந்தனர்.

இதில் இருவர் துப்பாக்கிசூட்டிலும் ஒருவர் தட்டையான ஆயுதத்தால் தாக்கப்பட்டும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.