புதிய கட்சி உருவாவதை தடுக்க முடியாது

Published By: Raam

09 Jan, 2016 | 07:54 AM
image

நாட்டின் தற்­போ­தைய நிலை­மைகள் தொட­ரு­மானால் புதிய அர­சியல் கட்­சி­யொன்று உரு­வாகும் நிலை­மையை தடுக்க முடி­யாது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்­துள்ளார்.

பிர­பா­க­ரனை அழித்­தி­ருக்­கா­விட்டால் இன்று என்னை கைது­செய்ய வேண்­டு­மென்று கூச்­ச­லி­டுவோர் வாய் திறக்க முடி­யாமல் இருந்­தி­ருப்­பார்கள். என்­னுடன் நெருங்கி இருந்­த­வர்­களே என்னை வெளி­யேற்ற துடிக்­கின்­றனர் என்றும் குற்றம் சாட்­டி­யுள்ளார்.

கண்­டிக்கு வியா­ழக்­கி­ழமை விஜ­யத்தை மேற்­கொண்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தலதா மாளி­கையில் இடம்­பெற்ற வழி­பா­டு­களின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

இங்கு மேலும் முன்னாள் ஜனா­தி­பதி உரை­யாற்­று­கையில்

நான் ஒரு­போதும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை விட்டு வெளி­யே­ற­மாட்டேன். ஆனால் என்னை கட்­சி­யி­லி­ருந்து வெளி­யேற்­று­வ­தற்கு என்­னோடு நெருங்கி இருந்­த­வர்­களே முயற்­சி­களை முன்­னெ­டுக்­கின்­றார்கள்.

ராஜித சேனா­ரத்ன என் மீது குற்­றங்­களை சுமத்­து­கிறார். என்னை சிறைக்கு அனுப்ப முடியும் என வாதி­டு­கின்றார். நான் யுத்­தத்தை முடித்து வைத்­த­தினால் இவ்­வாறு அவர் பேசு­கின்றார்.

பிர­பா­கரன் அழிக்­கப்­ப­டாமல் இருந்­தி­ருந்தால் முப்­பது வரு­ட­கால யுத்தம் முடிக்­கப்­பட்­டி­ருக்­கா­விட்டால் நாட்­டுக்கு சுதந்­தி­ரத்தை மீளப் பெற்றுக் கொடுத்­தி­ருக்­கா­விட்டால் இன்று கூச்­ச­லி­டுவோர் “வாய்” திறந்­தி­ருக்க மாட்­டார்கள்.

என்னால் தான் இவர்கள் இன்று வாய் திறக்க முடிந்­துள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை விட்டு வெளி­யே­றி­ய­வர்­களே எம்மை வெளி­யேற்ற முயற்­சி­களை முன்­னெ­டுக்­கின்­றனர். எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டார நாயக்க, ஸ்ரீமாவோ பண்­டார நாயக்க ஆகி­யோ­ருடன் அன்று கட்­சியில் நான் இருந்தேன் கட்­சியை பாது­காத்தேன்.

பண்­டார நாயக்க கொள்­கை­களைப் பாது­காத்தேன். ஆனால் இன்று எம்மை எதி­ரி­களைப் போன்று பார்க்­கின்­றனர். இன்று கட்­சியில் எம்­மோடு இணை­யுங்கள் என்ற அழைப்­பில்லை. மாறாக கட்­சியை விட்டு வெளி­யேற்­றுங்கள் என்ற செய்­தியே வழங்­கப்­ப­டு­கி­றது.

நாட்டில் தற்­போது இடம்­பெறும் சம்­ப­வங்கள் தொட­ரு­மானால் எதிர்­கா­லத்தில் புதி­ய­தொரு அர­சியல் கட்சி உரு­வா­வதை தடுக்க முடி­யாது போகும்.

நான் என்ன உண­வ­ருந்­தினேன், எனது சமை­ய­லறை, மல­சல கூடம், 2005 தொடக்கம் 2015 வரை நான் எப்­படி நித்­திரை செய்தேன் என்பவை தொடர்பிலேயே இந்த அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்கின்றது.

இன்றைய நல்லாட்சி தொடர்பில் மக்களிடம் கேட்டால் உண்மையை புரிந்து கொள்ள முடியும். இன்று பச்சை மிளகாயின் விலை வானை எட்டியுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35