கால அவகாசம் வழங்கப்பட்டமையானது இலங்கைக்கு மிகவும் ஆபத்தானது : கலாநிதி தயான் ஜெயதிலக

Published By: Priyatharshan

24 Mar, 2017 | 03:40 PM
image

(ஆர்.யசி)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் பொறுப்புக் கூறல் விடயத்தில் மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதானது இலங்கைக்கு மிகவும் ஆபத்தானதுடன் இந்தப் பயணம் இறுதியில் சர்வதேச விசாரணையில் வந்து முடியும் என கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்தார்.  

இலங்கைக்கு எதிரான முதல் பிரேரணையில் நிராகரிக்கபட்ட அனைத்தையும் இரண்டாம் கட்டத்தில் நிறைவற்றவும் புலிகள் எதிர்பார்க்கும் அனைத்தையும் பெற்றுக்கொள்ளவுமே தற்போது பொறுப்புக் கூறல் விடயத்தில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலையிட்டு இந்த நகர்வை  தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த பயணம் சர்வதேச விசாரணையில் வந்து முடியும்.

இலங்கைக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனீவா பிரேரணையை நிறைவேற்றுவதற்கான இரண்டு வருட கால அவகாசம் வழங்கியிருப்பதன் மூலம் ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கம் எதிர்த்த, நிராகரித்த விசயங்களை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

நாட்டுக்கு எதிராக கடந்த காலத்தில் சர்வதேச தரப்பு கொண்டுவந்த பிரேரணையை முன்னைய அரசாங்கம் எதிர்த்த  நிலையில் இந்த அரசாங்கம் அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க பிரேரணைக்கு மீள் இணக்கம் தெரிவித்து முழுமையாக நிறைவேற்ற அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

பிரபாகரனை காப்பாற்ற முயற்சி செய்ய நபர்களே இன்று ஜெனிவா பிரேரணையை கொண்டுவந்துள்ளனர். இதில் புலிகளை நியாயப்படுத்திய நபர்களும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இறுதி யுத்தத்தில் பிரபாகரனை காப்பாற்ற கடும் முயற்சி எடுத்த நபர்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் நிறைவேற்றவே அரசாங்கம் முயட்சிகின்றது.

ஆகவே தமிழர் தரப்பும் புலம்பெயர் அமைப்புகளும் புலிகளின் பிரதிநிதிகளும் எதை எதிர்பார்த்து செயற்படுகின்றனரோ அதை அடையும் பாதையை அரசாங்கம் தனது இணக்கத்தின் மூலம் ஏற்றுக்கொண்டுள்ளது.

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கைக்கு இரண்டு ஆண்டுகால கால அவகாசம் வழங்கும் தீர்மானம் தொடர்பில் கருத்து முன்வைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55