30 வருடங்களுக்குப்பின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்  சம்பந்தன்

Published By: MD.Lucias

08 Jan, 2016 | 08:28 PM
image

சுமார் 30 வருடங்களுக்குப்பின் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார் இரா. சம்பந்தன்.

புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னுள்ள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் த.தே.கூ அமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமாகிய இரா. சம்பந்தன் இணைத்தலமையை ஏற்றுக் கொண்டு எதிர்வரும் 14 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். 

மேற்படி ஒருங்கிணைப்பு குழுக்களின் இணைத்தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டு அதற்குரிய நியமனத்தை கடந்த புதன்கிழமை இரா. சம்பந்தன் அவர்கள் ஜனாதிபதியிடமிருந்த பெற்றுக் கொண்டுள்ளார். 

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவர்களாக த.தே.கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத்தலைவருமான சுகந்த புஞ்சி நிலம, திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவருமான அப்துல்லா மஃ றூப், கிழக்கு மாகாணம் முதலமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு இணைத்தலைவருமான நஸீர் அகமட் ஆகிய நால்வரும் இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வபிவிருத்தி குழுவின் பதவி வழி செயலாளராக அரசாங்க அதிபர் என்.புஸ்பகுமார செயற்படுவார். 

1977 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துவரும் இரா. சம்பந்தன் அவர்கள் 1983 ஆம் ஆண்டுக்குப்பின் ஏற்பட்ட இனப்போரைத் தொடர்ந்து கடந்த 30 வருடங்களுக்கு மேலாக திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அவர் எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 10 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார். 

2016 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்களின் முதலாவது கூட்டத்தில் ஜனாதிபதியின் நிலைபேறான நாடு கொள்கைப் பிரகடனத்தின் முன்னிலை அவதானம் ஈர்க்கப்பட்டுள்ள நான்கு விசேட கருத்திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்படவுள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர். திருமதி குகவதனி பரமேஸ்வரன் தெரிவித்தார். 

01) உள்நாட்டு உணவு மேம்பாட்டு நிகழ்ச்சி திட்டம்.

02) சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம்.

03)  போதையிலிருந்து விடுபட்ட நாடு தேசிய போதைப் பொருள் தடுப்பு நிகழ்சித் திட்டம்

04) சிறு நீரக நோய்த் தடுப்பு நிகழ்ச்சித் திட்டம் ஆகிய நான்கு விடயங்கள் பற்றி கலந்துரையாடப்படவுள்ளது. 

இவை அனைத்துக்கும் மேலாக 2015 ஆம் ஆண்டு முடிவடைந்த வேலைகள் பற்றிய மதிப்பீடு மாவட்ட புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள் குடியேற்றம் தொடர்பான முன்னேற்ற நிலைகள் ஆகியவற்றுடன் 2016 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படவுள்ள பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீடு சம்பந்தமான விளக்கங்களும் இடம்பெறுமென மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51