ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமர்வில் பகுதியின் நீர்தேக்க கரையோரத்திலிருந்து இன்று காலை 11 மணியளவில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நீர்தேக்கத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சடலமொன்று மிதப்பதைக்கண்டு பொலிஸருக்கு அறிவித்துள்ளனர்.

 
சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்றும் மேலதிக விசாரணை தொடர்வதாகவும், விசாரணையின் பின் சடலம் பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.