திருக்கோவில் பிரதேச  மயானத்துக்கு அருகில் வெடி குண்டுகள் இன்று வெள்ளிக்கிழமை  காலை மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

 பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து திருக்கோவில் மயானத்துக்கு அருகில் குறித்த பகுதியை பொலிசார் சோதனையிட்டபோது அங்கிருந்து 2 கைக்குண்டுகள், 2 மோட்டார் குண்டுகள், 2 டொங்கான் குண்டுகள், 2 மிதிவெடிகள் 3 மகசீன். 25 துப்பாக்கி ரவைகள் என்பனைவற்றை மீட்டனர்.

இச் சம்பவம் தொடர்பாக திருக்கோவில் பொலிசர் விசாரணைகளை மேற் கொண்டுவருகின்றனர்.